தொடரும் விபத்துக்களால் மக்கள் கோரிக்கை

தொடரும் விபத்துக்களால் மக்கள் கோரிக்கை

விபத்து

திண்டுக்கல் நத்தம் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதால் வேகத்தடை அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

திண்டுக்கல் நத்தம் ரோடு பாதுகாப்பு அற்றதாக விளங்குகிறது. திண்டுக்கல் நத்தம் சாலையில் பொன்னகரம் அடுத்து செவன்த் டே பள்ளியும் அதன் எதிரே வள்ளலார் உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. ஆனால் இந்த இரு சாலைகளிலும் எந்த ஒரு சாலை தடுப்பு பேரிகாடோ அல்லது வேகத்தடையோ இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இன்று காலையில் ஏற்பட்ட விபத்தில் கோரமாக ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடிக்கடி ஏற்படும் இந்த விபத்தை தடுக்க போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டு சாலைகளிலும் வேகத்தடையோ அல்லது வேக தடுப்பு பேரி கார்டு உடனடியாக வைக்க வேண்டும்.

Tags

Next Story