பாதுகாப்பில்லாத பொதுக்கிணறு - கம்பி வளையம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
பாதுகாக்கப்பற்ற நிலையில் கிணறு
மல்லசமுத்திரம் அருகே பெராங்காடு கிராமத்தில் உள்ள பொதுக் கிணற்றுக்கு கம்பிவளையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மல்லசமுத்திரம் அருகே உள்ள, கோட்டப்பாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்ட, பெராங்காடு அருந்ததியர் தெருவில், 40க்கும் அதிகமான குடியிருப்பில் மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 45 வருடங்களுக்கு முன்னர், குடியிருப்புகள் அருகில் பொதுக்கிணறு தோண்டப்பட்டது. இதுவரையில் கிணற்றின் மேல்பகுதியில் கம்பிவளையம் ஏதும் அமைக்கப்படவில்லை. இதனால் யாரேனும் தவறி விழுந்து உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.எனவே, ஆபத்து நேரும் முன்னரே, கிணற்றுக்கு கம்பி வளையம் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story