தாமதமாகும் பாலம் கட்டும் பணி - போக்குவரத்தின்றி தவிக்கும் 10 கிராமம்

தாமதமாகும் பாலம் கட்டும் பணி - போக்குவரத்தின்றி தவிக்கும் 10 கிராமம்

பாலம் கட்டும் பணியில் தாமதம் ஏற்பட்டுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

விரைந்து நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் கோரிக்கை

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தல் வைகை குறுக்கே பெத்தானேந்தல் கிராமத்தை இணைக்கும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி நபார்டு திட்டத்தின் மூலம் சுமார் 18 கோடி மதிப்பீட்டில் கடந்த 9.6.22 அன்று துவங்கியது. 18 தூண்களுடன் 350 மீட்டர் நீளமுள்ள இப்பாலப்பணிகள் வரும் டிசம்பர் மாதம் 8 ம் தேதிக்குள் நிறைவுபெற வேண்டும் என்பது ஒப்பந்தம்.

ஆனால் , தற்போது 30% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வைகை ஆற்றில் தண்ணீர் வருவதால், பெத்தானேந்தல், மணல்மேடு, கணக்கன்குடி, கருங்குளம், வெங்கட்டி, சடங்கி, பாப்பாகுடி உள்ளிட்ட 10 கிராம மக்கள் ஆற்றை கடக்க முடியாமல் துண்டிக்கப்பட்ட நிலையில் இப்பகுதியில் வசிக்கும் 3 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், விவசாயிகள், நோயாளிகள், முதியோர்கள் சுமார் 13 கி.மீ சுற்றி செல்லவேண்டிய அவல நிலை நீடித்து வருகின்றது.

குறைந்த எண்ணிக்கையிலான வெளி மாநில தொழிலாளர்கள் மற்றும் கட்டுமான உபகரணங்களை கொண்டு தகுதியில்லாத ஒப்பந்ததாரரை கொண்டு பணி மேற்கொள்ளப்படுவதாகவும். ஆற்றில் கூடுதல் தண்ணீர் வரும் போது கட்டுமான உபகரணங்கள் தண்ணீரில் அடித்து செல்லும் நிலையுள்ளது.

இதனை ஆய்வு செய்ய வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை என்று குற்றம்சாட்டும் சமுக ஆர்வலர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் பாலம் பணியை நிறைவேற்றாத ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story