சாலையோரம் மண் அணைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சாலையோரம் மண் அணைக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்
X

பொதுமக்கள் கோரிக்கை

குளக்கரை சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் அணைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

காஞ்சிபுரம் ஒன்றியம், கோனேரிகுப்பம் ஊராட்சி, காமாட்சியம்மன் நகர், போதி தர்மர் புத்த விஹார் எனப்படும் புத்தர் கோவிலுக்கு செல்லும் சாலை உள்ளது. சமீபத்தில் இச்சாலை புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. சாலை தரைமட்டத்தைவிட சிமென்ட் சாலை உயரமாக அமைக்கப்பட்டுள்ளதால் குளக்கரை சாலையோரம் பள்ளமாக உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, பள்ளத்தில், நிலை தடுமாறி தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, குளக்கரை சாலையோரம் உள்ள பள்ளத்தில் மண் அணைக்க, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags

Next Story