சாலையோரம் நிறுத்தும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

சாலையோரம் நிறுத்தும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம்

சாலையோரம் நிற்கும் லாரிகள்

சாலையோரம் நிறுத்தும் லாரிகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, தற்போது அதிவேக நெடுஞ்சாலையாக விரிவுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த விரைவுச் சாலை, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை உள்ளடக்கியது. இந்த நெடுஞ்சாலையோரம் திருமழிசை அடுத்த குத்தம்பாக்கம், செட்டிப்பேடு, தண்டலம் ஆகிய பகுதியில் இணைப்பு சாலையில் உள்ள உணவகங்களுக்காக அதி விரைவு நெடுஞ்சாலையோரம் கனரக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.

இவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. இந்த அதி விரைவு நெடுஞ்சாலையில் இணைப்பு சாலை இருந்தும் உணவகங்களுக்கு வரும் வாகனங்கள் இணைப்பு சாலையில் நிறுத்தாமல் நெடுஞ்சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.

இவ்வழியே ரோந்து பணி மேற்கொள்ளும் காவல் துறையினர் இவ்வாறு கண்டும் காணாமல் விட்டு விடுகின்றனர். இதேபோல் திருமழிசை தொழிற்பேட்டை, குத்தம்பாக்கம், பாப்பன்சத்திரம் உட்பட பல இடங்களில் உணவகம் முன் நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவது தொடர்கதையாக நடந்து வருகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தேசிய நெடுஞ்சாலையில் உணவகங்கள் முன் நிறுத்தப்படும் வாகனங்களை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags

Next Story