திருத்தணி: சாலையில் தேங்கிய கழிவுநீர்

திருத்தணி:  சாலையில் தேங்கிய கழிவுநீர்

சாலையில் கழிவு நீர்

திருத்தணியில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்ற பொதுமக்கள் கோரிக்கைவைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று இரவில் பெய்த மழை 45 நிமிடம் பெய்த மழை காரணமாக திருத்தணி ரயில் நிலையம் செல்லும் சாலையில் 1- கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மழைநீர் வடிவ கால்வாய் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கட்டப்பட்ட கால்வாயில் தண்ணீர் மழை தண்ணீர் ஓடாமல் இதனுடன் கழிவு நீரும் கலந்து ரயில் நிலைய சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.

இதனை கடந்து செல்ல முடியாமல் இரு சக்கர வாகனங்கள் மற்றும் வாகனங்கள் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தது. தொடர்ச்சியாக சிறிய மழை பெய்தாலும் கழிவுநீர் மழை நீர் ரயில் நிலைய சாலையில் செல்கிறது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முன் வரவேண்டும் என்றும் திருத்தணி-அரக்கோணம் சாலை மற்றும் மேட்டு தெரு போன்ற பகுதிகளில் தொடர்ச்சியாக சிறிய மழை பெய்தாலும் அதிக அளவு போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனங்கள் தவிக்கின்றது. இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து குழு அமைத்து உடனடியாக நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திருத்தணி நகராட்சி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story