மக்கள் குறைதீர் கூட்டம்

மக்கள் குறைதீர் கூட்டம்

குறைதீர் கூட்டம்

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி தலைமையில் இன்று (10.06.2024) நடைபெற்றது.

இதுகுறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு அதீத முக்கியத்துவம் அளித்து, விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா வேண்டுதல், சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு. இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத் தொகை உள்ளிட்ட இதர உதவித் தொகைகள் உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டியும் மொத்தம் 315 மனுக்கள் வரப்பெற்றன என தெரிவித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story