கருங்குளத்தை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

கருங்குளத்தை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு!

கருங்குளம் 

கருங்குளத்தை சீரமைக்க பொதுமக்கள் எதிர்பார்ப்பு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் குப்பைக் கூளங்கள் நிறைந்து காணப்படும் கருங்குளத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட திருமயம் கோட்டையும், அதனைச் சுற்றியுள்ள பைரவர் மற்றும் சிவன், பெருமாள் கோயில்களும் முக்கியமான சுற்றுலாத்தலமாக விளங்குகின்றன. தினமும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, அருகிலுள்ள சிவகங்கை, தஞ்சாவூர், ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மக்களும் நூற்றுக்கணக்கில் வந்து செல்கின்றனர். இத்தகைய முக்கியத்துவம் கொண்ட திருமயத்தில் பேருந்து நிலையத்துக்கு அருகே சுமார் 3 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட கருங்குளம் முழுமையாக குப்பைக் கழிவுகளைக் கொட்டும் ஓரிடமாக மாற்றப்பட்டுள்ளது. நெருக்கமான குடியிருப்புகளை கொண்டுள்ள இந்தக் குளத்தி ஏராளமான நெகிழி கழிவுகள்மிதக்கின்றன. கறிக்கடைகளில் இருந்து கொட்டப்பட்ட இறைச்சிக் கழிவுகளும் ஆங்காங்கே தென்படுகின்றன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த துரை நாராயணன் கூறியது: இப்போது சுமார் 3 ஏக்கர் பரப்பளவு இருக்கலாம். சுற்றிலும் ஆக்கிரமிப்புகளும் குளத்தில் உருவாகியிருக்கின்றன. அருகிலுள்ள கடைக்காரர்கள் அனைவரும் தங்களின் நெகிழி உள்ளிட்ட குப்பைக் கழிவுகளை முழுமையாக இந்தக் குளத்தில்தான் கொட்டுகின்றசுமார் 4 ஆண்டுகளாகவே இதுகுறித்து அரசு அலுவலர்களுக்கு பொதுமக்கள் சார்பில் புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதேபோல, சுற்றுப்பகுதியிலுள்ள வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் சாக்கடைக் கழிவுகளும் இந்தக் குளத்தில்தான் விடப்படுகின்றன. இதனால், நிலத்தடி நீரும் கெட்டுப்போய் விட்டது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபகுதியில் இருந்த ஆழ்துளைக் கிணற்றில் இப்போது தண்ணீர் மோசமான வருகிறது. வாடையுடன் எனவே, ஊரக வளர்ச்சித் துறையினர் இந்தக் குளத்தை சீரமைத்து, குப்பைகள், கழிவுகள் குளத்தில் மீண்டும் சேராத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றார் துரை நாராயணன்.

Tags

Next Story