நாமக்கல் மலைக்கோட்டைக்கு படையெடுத்த மக்கள்!

ஞாயிறு மற்றும் பக்ரீத் விடுமுறை தினத்தை முன்னிட்டு நாமக்கல் நகருக்கு வந்த வெளியூர் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கூட்டம் கூட்டமாக, மலைக்கோட்டைக்கு சென்று, நகரின் அழகை கண்டு ரசித்தனர்.
நாமக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள மலைக்கோட்டை, மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது. பாறையின் மீது அமைந்துள்ள இந்த கோட்டை, ராமச்சந்திர நாயக்கர் கட்டியதாக கூறப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், திப்புசுல்தான் இந்த கோட்டையில் இருந்து, ஆங்கிலேயர்களை எதிர்த்து சண்டையிட்டார். சிறப்பு மிக்க மலைக்கோட்டைக்கு, நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள், வந்து செல்கின்றனர். நேற்று ஞாயிற்றுகிழமை என்பதால் வெளியூரில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்மர் கோவில்களில் தரிசனம் முடிந்து மலைக்கோட்டைக்கு வருவார்கள் இன்று பக்ரீத் விடுமுறை என்பதாலும் வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள், பெற்றோர், தங்கள் குழந்தைகளுடன் மலைக்கோட்டைக்கு சென்று, நாமக்கல் நகரின் அழகை கண்டு ரசித்து செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Tags

Next Story