கோவையில் வாக்களித்த அடையாளத்துடன் பங்கேற்ற People for annamalai அமைப்பினர்
கோவையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பொதுமக்களாக உருவாக்கிய இயக்கம் People for annamalai என்று கூறி அந்த அமைப்பினர் இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை மக்களவை தொகுதியில் லட்சக்கணக்கானோரின் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி அவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.கைகளில் பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அந்த அமைப்பினர் பெரும்பால நபர்களின் கைகளில் வாக்களித்ததற்கான அடையாளங்களுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். பொதுஜனங்கள் உருவாக்கிய அமைப்பு என சொன்னாலும் பா.ஜ.க ஸ்டைலில் "பாரத் மாதா கி ஜே" என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் துவங்கி அதே முழக்கத்துடன் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.
ஆர்ப்பாட்டத்தின் போது பா.ஜ.க இதை பார்த்து கொண்டு சும்மா இருக்காது என தெரிவித்த அந்த அமைப்பினர் இது பொது மக்களாக உருவாக்கிய அமைப்பு இதற்கும் பா.ஜ.கவிற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தனர். வாக்களித்தற்கான அடையாளத்துடன் வாக்குகள் நீக்கப்பட்டதாக கூறி People for annamalai அமைப்பினை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருள் ஆகியுள்ளது.