சர்க்கஸை காண குவிந்த பொதுமக்கள்

X
பக்ரீத் விடுமுறை நாளான இன்று திருநெல்வேலியில் நடக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்தனர்.
பக்ரீத் விடுமுறை நாளான இன்று திருநெல்வேலியில் நடக்கும் சர்க்கஸ் நிகழ்ச்சியை காண பொதுமக்கள் குவிந்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் மானூர் மெயின் ரோட்டில் மதுரை ஜீவா சர்க்கஸ் சார்பில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் ஒட்டகம், குதிரை, குரங்கு, நாய், ஆட்டுக்குட்டி உள்ளிட்ட விலங்குகளை கொண்டு பல்வேறு சர்க்கஸ் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் உற்சாகமாக பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 17) பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை தினம் என்பதால் மக்களின் கூட்டம் அதிகளவு காணப்படுகின்றது.
Next Story
