பூச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்

பூச்சந்தையில் குவிந்த பொதுமக்கள்

ரோஜா பூ 

புத்தாண்டை முன்னிட்டு தூத்துக்குடி பூச்சந்தையில் பூக்களை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. மல்லிகை கிலோ ரூ.2000 க்கும், பிச்சி கிலோ ரூ.1500 க்கும், செவ்வந்தி கிலோ ரூ.200க்கும் விற்பனையானது.

நாளை ஜனவரி 1 ஆங்கில புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு தூத்துக்குடியில் மழை வெள்ள பாதிப்புக்கு பின்பு இயல்புநிலை திரும்பியதை தொடர்ந்து புத்தாண்டை சிறப்பாக கொண்டாட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதையடுத்து தூத்துக்குடி பூ சந்தையில் பூக்களை வாங்க பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது மல்லிகை பூ கிலோ 2000 வரையும், பிச்சிப்பு கிலோ 1500 ரூபாய் வரையும் செவ்வந்தி பூ கிலோ 200 ரூபாய் வரையும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது மேலும் புத்தாண்டுக்காக பெங்களூர் ஊட்டி கொடைக்கானல் ஆகிய பகுதியிலிருந்து பல வண்ணங்களில் ரோஜா பூக்கள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது ரோஜா பூ கட்டு 260 வரை விற்பனை செய்யப்படுகிறது புத்தாண்டை முன்னிட்டு விலையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பூக்களை வாங்கிச் செல்கின்றன.

Tags

Next Story