குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

குளச்சல் கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்
குளச்சல் கடற்கரையில் குவிந்தோர்
குளச்சல் கடற்கரையில் பொதுமக்கள் குவிந்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கடற்கரை சுற்று வட்டார பொதுமக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு தலமாக உள்ளது. தினமும் மாலை வேளை மற்றும் விடுமுறை நாட்களில் பொதுமக்கள் இங்கு வந்து பொழுதை போக்கி செல்வது வழக்கம்.

கடந்த வாரம் கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர். இந்த நிலையில் நேற்று ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு அரசு விடுமுறை மற்றும் பள்ளி அரையாண்டு விடுமுறை என்பதால் மாலையில் சிறுவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீண்டும் குளச்சல் கடற்கரையில் குவிந்தனர்.

குடும்பத்தினர், நண்பர்கள் என கூட்டம் கூட்டமாக கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து பொழுதை கழித்தனர். நேற்று இரவு வரை இந்த கூட்டம் நீடித்தது.

Tags

Next Story