பொங்கல் பரிசுத்தொகுப்பு: பட்டியலை பார்க்க குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: பட்டியலை பார்க்க குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: பட்டியலை பார்க்க குவிந்த பொதுமக்கள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு பெற தகுதியானவர்கள் குறித்த பட்டியலை பார்க்க ரேஷன் கடைகளில் மக்கள் ஆர்வமுடன் குவிந்தனர்.

தை திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு அறிவித்துள்ளது. அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு கிலோ சர்க்கரை ஒரு முழு நீள கரும்பு உள்ளிட்டவர்கள் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் ரூபாய் 1000 தகுதியான குடும்பத்தினர்கள் வழங்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி வருமான வரி செலுத்துவோர் சீனி மற்றும் பொருளில்லா ரேஷன் அட்டை வைத்திருப்போர் மத்திய மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்டவருக்கு ரூபாய் ஆயிரம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது இந்த நிலையில் ரேஷன் கடைகளில் ரூபாய் ஆயிரத்திற்கான டோக்கன் வழங்கும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. யார் யாருக்கு பொங்கல் தொகுப்பு கிடைக்கும் என்ற குழப்பத்தில் பலர் இருந்த நிலையில் நெல்லை ரேஷன் கடைகளில் ரூபாய் 1000 பெற தகுதியான குடும்ப அட்டைதாரர்கள் குறித்த தகவல் அடங்கிய பட்டியல் ரேஷன் கடைகள் முன்னாள் ஒட்டப்பட்டுள்ளது.

இதனை குடும்ப அட்டைதாரர்கள் ஆர்வமுடன் ரேஷன் கடை முன்பு குவிந்து தங்களது பெயர்கள் இடம் பெற்றுள்ளதா என்பதை பார்த்து வருகின்றனர். பட்டியலில் உள்ள பெயர் உள்ளவர்களுக்கு மட்டுமே ரேஷன் கடைகளில் டோக்கன் வழங்கப்படும் என ஊழியர்கள் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட்டியலில் பெயர் உள்ளவர்கள் டோக்கன்களை ஆர்வமுடன் பெற்று செல்கின்றனர்.

Tags

Next Story