சேலத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம்

சேலத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம்

சேலத்தில் மக்கள் குறைத்தீர் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும் என அலுவலர்களுக்கு கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டார்.

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் பிருந்தா தேவி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கூறினார். அதன் பிறகு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது,பொதுமக்கள் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காண வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பெண்கள் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் உள்ளிட்ட பணிகளில் அரசு அலுவலர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

குறிப்பாக பொதுமக்கள் ஒருமுறை வழங்கிய மனுக்கள் மீண்டும் வராத வகையில் அந்த மனுக்களுக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். பின்னர் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகள் கேட்டார். தொடர்ந்து அவர்களிடம் இருந்து 16 கோரிக்கை மனுக்கள் பெற்றார். பின்னர் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒரு மாணவருக்கு ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்தில் அதிநவீன பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கினார்.

கூட்டத்தில், கூடுதல் கலெக்டர் அலர்மேல்மங்கை, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, உதவி கலெக்டர் சுவாதிஸ்ரீ உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக்கடன்கள், கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட மொத்தம் 412 மனுக்கள் பெறப்பட்டது.

Tags

Next Story