மேயர் வார்டில் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்

மேயர் வார்டில் குடிநீருக்கு அல்லாடும் மக்கள்

மின் இணைப்பு கொடுக்கபடாத குடிநீர் தொட்டி 

காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின் வார்டு பகுதியில் குடிநீருக்காக பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில், கோடை வெப்பம் காரணமாக, நிலத்தடி நீர் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சியிலும் குடிநீர் பிரச்னை உள்ள பகுதிகளில், லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், மாநகராட்சி மேயர் மகாலட்சுமியின், 9வது வார்டில், முருகன் கோவில் அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டிக்கு, இன்று வரை மின் இணைப்பும் கொடுக்காமல், மோட்டார் பொருத்தாமல் இருப்பதால், அப்பகுதி மக்கள் குடிநீருக்கு அவதிப்படுகின்றனர்.இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியாததால், நீண்ட துாரம் சென்று தண்ணீர் பிடித்து வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கோடைக்கால தாக்கம் கடுமையாக உள்ள சூழலில், இந்த குடிநீர் தொட்டியை பயன்படுத்த முடியவில்லை என, அப்பகுதியினர் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து மேயர் மகாலட்சுமியிடம் கேட்டபோது, 'குடிநீர் தொட்டிக்கு பணி ஆணை காலதாமதமாக கொடுக்கப்பட்டது. முன்னாள் கமிஷனரிடம் இது சம்பந்தமான கோப்புகள் தேங்கியிருந்தது. 'தற்போதுள்ள கமிஷனரிடம் தெரிவித்துள்ளேன். குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்குள் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. ஓட்டு எண்ணிக்கை முடிந்தவுடன், பயன்பாட்டுக்கு வந்துவிடும்' என்றார்."

Tags

Read MoreRead Less
Next Story