பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்!

பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டம்!

மறியல் போராட்டம்

ஆலங்குடி அருகே மாத காலமாக முறையான குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நம்மன்பட்டி கிராமத்தில் கடந்த ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் அதிலும் கடந்த ஒரு வார காலமாக முழுவதுமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் ஆலங்குடி ஆதனக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு.

ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட நம்பன்பட்டி கிராமத்தில் சுமார் 2000 மக்கள் வசித்து வருகின்றனர். இக்கிராமத்திற்கு கடந்த ஆறு மாத காலமாக முறையான குடிநீர் வழங்கவில்லை எனவும் அதிலும் கடந்த ஒரு வார காலமாக முழுவதுமாக குடிநீர் வரவில்லை என குற்றம் சாட்டி அந்த பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த காவல்துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையிலான போலீசார் நடத்திய பேச்சு வார்த்தையில் சற்று நேரத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் வந்துவிடுவார் உங்கள் பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.

குடிநீர் பிரச்சனைக்காக பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டதால் ஆலங்குடி- ஆதனக்கோட்டை சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags

Next Story