சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுப்பட்டவர்கள் கைது
சட்டவிரோத மதுவிற்பனை
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகே சட்டவிரோத மதுவிற்பனையில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, பகுதிகளில் சட்ட விரோதமாக மது விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் லாலாபேட்டை காவல் உதவி ஆய்வாளர் தங்கசாமி, லாலாபேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பிள்ளாபாளையம் பகுதியில், ஏப்ரல் இருபதாம் தேதி மதியம் 2 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, அருகில் உள்ள அரிஜன காலனி தெருவை சேர்ந்த ஆனந்த். வயது 41 என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், அவர் விற்பனைக்கு வைத்திருந்த 40 குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் ,இது தொடர்பாக ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் லாலாபேட்டை காவல்துறையினர்.
Next Story