பொதுமக்கள் தரையில் படுத்து போராட்டம்
சாலை மறியல்
திண்டுக்கல் அருகே குடிநீர் குழாய் அமைப்பதற்கு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட N.பஞ்சம்பட்டி ஊராட்சியில் ஏற்கனவே தண்ணீர் பிரச்சனை உள்ளது. இதனால் பொதுமக்கள் சிறுநீருக்கு தொடர்ந்து அலைந்து வருகின்றனர். பல கிலோமீட்டர் தூரம் சென்று குடிநீர் எடுத்து வரும் அவல நிலை நீடிக்கிறது. அலுவலர்கள், பள்ளி மாணவ , மாணவிகள் தொடர்ந்து குடிநீர் இல்லாமல் பாதிக்கப்படுகின்றனர்.தற்போது பிள்ளையார் நத்தம் ஊராட்சிக்கு பஞ்சம்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மேல்நிலைத் தொட்டியில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் பஞ்சம்பட்டி பொதுமக்கள் தரையில் படுத்து போராட்டம் நடத்தினர். இதை எடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்கள் சமாதானம் படுத்தியதால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
Next Story