ஆக்கிரமிப்பு நெரிசலில் அண்ணாசாலை பொன்னமராவதி நகர மக்கள் அவதி!
பொன்னமராவதி நகரில் முக்கிய பகுதியாக அண்ணாசாலை உள்ளது. இங்கு நெடுஞ்சாலையை ஒட்டி சாலை யின் இருபுறமும் ஏராளமான கடைகள் உள்ளன. இந்த கடைகளின் முன்பு வியாபாரிகள் ஆக்ரமிப்பு செய்துள்ளதாலும், கடைகளுக்கு பொருட்களை வினியோகம் செய்ய வரும் சரக்கு லாரிகளால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
காலை 8 மணி முதல் 11 மணி வரை லாரிகள் வரிசையாக நிறுத்தப்பட்டு பொருட்களை இறக்கி செல்கின்றன. இதுதவிர சாலையோரம் ஏராளமானோர் தரைக்கடை அமைத்து பழங்கள், பூ. காய்கறிகள் ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இதன் காரணமாக குறுகிய இடத்துக்குள் இருசக்கர வாகன ஓட்டுனர்கள் சென்று வரும் சூழ்நிலை உள்ளது. காலை நேரம் என்பதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர் கள், அலுவலங்களுக்கு செல்வோர், மருத்துவமனைக்கு செல்லும் நோயா ளிகள் என்று பல்வேறு தரப்பினரும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதை தவிர்க்க காலை, மாலை வேளைகளில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் சரக்கு வாகனங்களை நகருக் குள் அனுமதிக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக வர்த்தக சங்க நிர் வாகிகளுடன் போலீசார், பேரூராட்சி நிர்வாகத்தினம் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.