என்னை வாழ வைத்த லால்குடி மக்கள் - அமைச்சர் கே. என். நேரு
அமைச்சர் கே.என்.நேரு பிரசாரம்
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியின் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் அருண் நேருவுக்கு வாக்கு சேகரித்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது: 1989 ம் ஆண்டு முதல் லால்குடி பகுதிக்கு எவ்வளவு அடிப்படை வசதிகளை செய்து உள்ளோம் என்பதை நன்றாக அறிவீர்கள். மேலும் வளர்ச்சி அடைய மாநிலத்திலிருந்து கிடைக்கின்ற நலத்திட்டங்களை காட்டிலும் மத்திய அரசு மூலம் பல நல திட்டங்கள் கிடைக்க உங்கள் வேட்பாளர் அருண் நேருவுக்கு உதய சூரியன் சின்னத்தை வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும் என இறுதிக்கட்ட பிரச்சார சுற்றுப் பயணத்தை தொடங்கி வைத்தார்,
திமுக வேட்பாளர் அருண்நேரு பேசியதாவது கடந்த 24 நாட்களாக என்னோடும் திமுக உணர்வோடு வாக்குகள் சேகரித்த லால்குடி எனது உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கு நன்றியினை காணிக்கையாக செலுத்துகிறேன். அதேபோல் வருகின்ற 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நீங்கள் வாக்களிக்க வேண்டிய சின்னம் உதயசூரியன் சின்னம் ஆகவே உங்களுக்காக உழைக்க அரசிடம் பல நலத்திட்டங்களை போராடி பெற்றுத் தர நான் தயாராக உள்ளேன் ஆகவே நீங்கள் அனைவரும் உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து உங்களுக்காக போராட என்னை டெல்லிக்கு அனுப்புமாறு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் சின்னம் உதய சூரியன் என்று வேட்பாளர் அருண் நேரு தீவிர வாக்கு சேகரித்தார். இந்நிகழ்வில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி லால்குடி எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் மற்றும் திமுக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.