திருக்கட்டளை ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

திருக்கட்டளை ஊராட்சி மக்கள் உண்ணாவிரத போராட்டம்

உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

திருக்கட்டளை ஊராட்சி மக்கள் மற்றும் திருமலையார் சமுத்திரர் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

புதுக்கோட்டை மாநகராட்சியுடன் தங்கள் ஊராட்சி கிராமங்களை இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையில் கேப்பரை மற்றும் மேட்டுப்பட்டி அருகே 300-க்கும் மேற்பட்ட திருக்கட்டளை ஊராட்சி மக்கள் மற்றும் திருமலையார் சமுத்திரர் மக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுக அரசு புதுக்கோட்டை மற்றும் அதை சுற்றுவட்டார கிராமங்களான திருமலராயர் சமுத்திரம், திருக்கட்டளை, முள்ளூர், உள்ளிட்ட ஒன்பது ஏ நத்தம் பண்ணை, தேக்காட்டூர் உள்ளிட்ட ஊராட்சிகளை ஒன்றிணைத்து புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.

இதனை அடுத்து ஊராட்சி பொதுமக்கள் தங்கள் ஊராட்சிகளை மாநகராட்சியோடு இணையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு ட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று திருமலைராயர் சமுத்திரம் ஊராட்சி மற்றும் திருக்கட்டளை ஊராட்சியை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட அப்பகுதி

பொதுமக்கள் புதுக்கோட்டை பட்டுக்கோட்டை சாலையான மேட்டுப்பட்டி மற்றும் கேப்பறை பேருந்து நிறுத்தம் அருகே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில் தற்பொழுது ஊராட்சியாக இருக்கும் பொழுது வீட்டு வரி, சொத்து வரி மிகக் குறைவாக செலுத்தி வரும் நிலையில் மாநகராட்சியோடு இணைக்கப்பட்டால் சொத்து வரி, வீட்டு வரி அதிகரிக்கக்கூடும் மேலும் 100 நாள் வேலை பாதிக்கப்படும் என்றும் மேலும் தங்கள் ஊராட்சிகளில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வரும் நாங்கள் எப்படி அளவுக்கு அதிகமாக சொத்து வரி வீட்டு வரி அதிகமாக செலுத்த முடியும் என தெரிவித்து,

ஆகவே தங்கள் ஊராட்சி ஊராட்சியாக இருக்க வேண்டும் மாநகராட்சியோடு இணைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து நாங்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதனை அடுத்து நாளை முள்ளூர் ஊராட்சி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story