பாமாயில் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டம்
மக்கள் போராட்டம்
திருவாரூர் அருகே பாமாயில் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் அருகே கருப்பூர் கிராமத்தில் திருவாரூர் ஆயில் அண்ட் பேட்ஸ் எனும் தனியார் பாமாயில் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இதிலிருந்து தினந்தோறும் வெளியேறும் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் நேரடியாக பூமிக்கு அடியில் செலுத்தப்படுவதாக கூறப்படுகிறது . இதனால் முற்றிலுமாக நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு நீரில் எண்ணெய் கழிவுகள் கலந்திருப்பதால் விவசாயம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story