காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்

செயல்வீரர் கூட்டம் 

காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அரியலூரில் நடைபெற்ற செயல்வீரர் கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தலை பேசினார்
காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த கட்சியினர் மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்வப்பெருந்தகை. அரியலூரிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது: பெருந்தலைவர் காமராஜர் காலத்தில் இருந்த காங்கிரஸ் இப்போது இல்லை. அதை நாங்கள் இழந்து விட்டோம். பாஜக போல அல்லாமல், தமிழ்நாட்டில் ஒரு பலமான வாக்கு வங்கி இருந்த வரலாறு காங்கிரஸ்க்கு உண்டு. 139 ஆண்டுகளை கடந்து நிற்கிற காங்கிரஸ் கட்சி நமக்கு தான் எல்லா மக்களையும் ஆதரிக்கின்ற, அரவணைக்கின்ற சித்தாந்தம் இருக்கிறது. இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 99 இடங்களில் வென்றுள்ளது. இளம் தலைவர் ராகுல் காந்தி என்ற முகம் இந்தியா முழுவதும் வேலை செய்து இருக்கிறது. காங்கிரஸ் கட்சியை கட்டமைப்பை வலிமைப்படுத்த தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, இளம் தலைவர் ராகுல்காந்தி இவர்கள் இருவரும் 24 மணி நேரமும் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது, பொறுப்பில் உள்ள நாம் என்ன பணியாற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதனை சுய பரிசோதனை செய்துக் கொள்ள வேணடும். அகில இந்திய செயலர் கிறிஸ்டோபர் திலக் கூறியது போல இது நம்முடைய காலம் அறுவடை செய்ய வேண்டியக் காலம். மக்கள் நம்மை நோக்கி வருகிறார்கள். அவர்களை அரவணைத்து கட்சியை வலிமைப் பெறச் செய்யவில்லை என்றால் எந்த காலத்திலும் கட்சியை வலுப்படுத்த முடியாது. இரண்டு ஆண்டுக்குள் சட்டப் பேரவைத் தேர்தல் வரவுள்ளது. அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்க துடிக்கும் அளவுக்கு அதற்கு கட்சியை வலிமைப்படுத்த வேண்டும். அதற்கு சமூகத்திடம் நல்லுறவு வைத்திருக்க வேண்டும். மக்கள் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்றார் அவர். கூட்டத்துக்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ஆ.சங்கர் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் சட்டப் பேரவை குழுத் தலைவர் ராஜேஷ்குமார், அகில இந்திய செயலர் கிறிஸ்டோபர் திலக்,மாநில துணைத் தலைவர் ஜி.ராஜேந்திரன், மாநில பொதுச் செயலர் செல்வம், தமிழ்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். முன்னதாக அரியலூர் நகர தலைவர் மா.மு.சிவகுமார் வரவேற்றார்.

Tags

Next Story