மண் சாலையால் மக்கள் கடும் அவதி

X
எஸ்.மேட்டுபாளையத்தில் மண்சாலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எஸ்.மேட்டுபாளையத்தில் மண்சாலையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் ஒன்றியம், பிள்ளாநத்தம் பஞ்சாயத்திற்குட்பட்ட, எஸ்.மேட்டுபாளையம் கிராமத்தில் 50க்கும் அதிகமான குடியிருப்பில் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடியிருப்புகள் அருகில் பலவருடங்களாக மண்சாலை உள்ளது. மழைக்காலங்களில் சேரும், சகதியுமாக மாறிவிடுவதால், வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளாகின்றனர். ஒருசிலர் தவறிவிழுந்து காயங்கள் ஏற்பட்டு எழுந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாது, வெயில் காலங்களில் சாலையில் படிந்துள்ள புழுதி பலத்த காற்றடித்தால் குடியிருப்புகளுக்குள் புகுந்தை குடியிருப்பை நாசம் செய்துவிடுகின்றது. அச்சமயங்களில் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சரிசெய்யக்கோரி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இப்பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags
Next Story
