பள்ளம் மூடப்படாததால் மக்கள் அவதி!

புதுக்கோட்டையில் பாதாள சாக்கடைக்கு தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாததால் மக்கள் அவதி!

புதுக்கோட்டை ஆலங்குடி பிரதான சாலையில் பாதாள சாக்கடை அடைப்பை சரி சய்ய ஒரு மாத காலமாக தோண்டப்பட்ட பல்லம் இன்னும் மூடாமல் இருப்பதால் போக்குவரத்தில் சிரமமும் அடிக்கடி சாலை விபத்துக்கள் நடந்த வண்ணம் உள்ளன அதனை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை! புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ஆலங்குடி செல்லும் பிரதான சாலை உள்ளது இங்கு ஏராளமான வங்கிகள், இருசக்கர வாகனங்கள் விற்பனை நிலையங்கள், சர்வீஸ் சென்டர்கள், பள்ளிக்கூடங்கள், சினிமா தியேட்டர்கள், உள்ளிட்ட ஏராளமான நிறுவனங்கள் உள்ளன மேலும் அருகே உள்ள நிஜாம் காலனி, சத்தியமூர்த்தி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டது இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது பொதுமக்களின் புகாரை யடுத்து நகராட்சி நிர்வாகம் அந்த இடத்தில் பல்லம் தோண்டி அடைப்பை சரி செய்தனர் மேலும் அந்த சாலைகளை உடைத்து அங்கேயே போட்டுவிட்டு சென்று விட்டனர் அதனை மூடவில்லை.

இதனால் அப்பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. ஆலங்குடி மட்டுமல்லாது அறந்தாங்கி மற்ற மாவட்டங்கள் கடற்கரை வழியாக புதுக்கோட்டையில் நுழையும் போது இந்த சாலை தான் பயன்படுகிறது இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்படுகிறது இந்நிலையில் இந்த சாலை சரி செய்யாத காரணத்தினால் தினமும் சாலை விபத்து நடைபெறுகிறது .நேற்று இரவு கூட பெரிய ஒருவர் இரவு நேரத்தில் கண் தெரியாமல் உள்ளே விழுந்துவிட்டார் அப்படி இருந்தும் எச்சரிக்கை பலகையோ வேற எதையோ வைத்து அதில் பாதுகாக்கவில்லை இது குறித்து பொதுமக்கள் சார்பில் பரமஜோதி என்பவர் தெரிவிக்கையில் இந்த பள்ளத்தை உடனடியாக மூடி பொது மக்களின் உயிரையும் அதேபோல் காலை மாலையில் சாலையில் செல்வோம் போக்குவரத்து மிகுந்த சிரமம் ஏற்படுகிறது அதனை சரி செய்ய வேண்டும் என கேட்டுக் கண்டார் .

Tags

Next Story