குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி

குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி

குரங்கு தொல்லையால் பொதுமக்கள் அவதி

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே வடக்கு சௌராஷ்டிரா புரம் பகுதியில் பொதுமக்களுக்கு தொல்லை தரும் குரங்குகளை வனத்துறையினர் பிடித்துச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நாகல் நகர், சௌராஷ்டிராபுரம் பகுதியில் குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. அலையா விருந்தாளியாக வீட்டுக்குள் நுழைந்து கண்ணாடி, சீப்பு மற்றும் உடைகளையும் தூக்கிச் செல்கின்றன. சில நேரங்களில் இட்லி சட்டியை தூக்கிச் சென்று அவற்றில் இட்லி ஊற்றுவது போல நடித்துக் காட்டுகின்றன. குரங்குகள் தொல்லையால் நிம்மதியாக நாங்கள் தூங்க முடியவில்லை. குரங்குகள் திறந்து இருக்கும் வீடுகளில் புகுந்து கையில் கிடைக்கும் பொருட்களை தூக்கிச் சென்று விடுகின்றன. குரங்கு தொல்லையில் இருந்து விடுபட வனத்துறையினரிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை. இதனால் பொதுமக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறோம் என பொதுமக்கள் கூறினர்.

Tags

Next Story