காலை நேர பனிமூட்டத்தால் பொதுமக்கள் அவதி

நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை நிலவிய கடும் பனிமூட்டதால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

தமிழகம் முழுவதும் தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பல்வேறு இடங்களில் வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தர்மபுரி மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தினந்தோறும் வெப்பநிலை 98 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டி நிலவி வருகிறது ஒரு சில நாட்கள் 100 டிகிரி செல்சியஸ் ஐ வெப்பம் தொட்டுச் செல்லும் நிலையில் காலை நேரங்களில் 8:00 மணி வரை பனிமூட்டம் நிலவுகிறது.

இன்று காலை நல்லம்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவிய கடும் பனிமூட்டதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் சாலையில் எதிரே வரும் வாகனங்கள் மற்றும் நபர்கள் தெரியாததால் அவதிக்கு உள்ளாகினர். மேலும் புளி மற்றும் மா, தக்காளி உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் இந்த மூடு பனிமூட்டதால் பாதிக்கப்படும் என விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் காலை நேரங்களில் ஏற்படும் பனி மூட்டத்தால் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக விவசாயிகள் கணித்து தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story