திருவெறும்பூர் அருகே பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி

திருவெறும்பூர் அருகே பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி

பத்திர பதிவு

திருவெறும்பூர் அருகே பத்திர பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதிககுள்ளாகினர்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள நவல்பட்டு அண்ணா நகர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம் வீட்டுமனைகள் மற்றும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இது அண்ணா நகர் பகுதி 1,2,3,மற்றும் டி என் யூ டி பி என பிரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அண்ணா நகர் பகுதியில் புல எண் 310 பகுதி 1 என்ற பகுதியில் பத்திரப்பதிவு ஏற்கனவே திருவெறும்பூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு மாத காலமாக புல எண் 310 பகுதி 1 எண்ணில் பத்திரப்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தாங்கள் வாங்கிய வீட்டுமனைகளை விற்கவோ அல்லது புதிதாக வாங்கவும் முடியாமலும் வீடுகளை விற்க முடியாமலும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இவர்கள் அனைவரும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து இந்த மனைகள் மற்றும் வீடுகளை வாங்கி உள்ளனர்.

இந்த நிலையில் பத்திரப்பதிவு குறித்த நேரத்தில் செய்ய முடியாததால் பொருளாதார இழப்பு மன உளைச்சல் என பல்வேறு பிரச்சனைகளில் அண்ணா நகர் பகுதி மக்கள் சிக்கி தவித்து வருகின்றனர். எனவே அண்ணாநகர் புல எண் 310 பகுதி 1ல் கடந்த ஒரு மாத காலமாக பத்திரப்பதிவு நடைபெறவில்லை இதனால் தமிழக அரசிற்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் தமிழக அரசு பத்திர பதிவுத்துறை மற்றும் வருவாய்த்துறை இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் நல பணியாளர் கும்பக்குடி ஆர் கலியமூர்த்தி தலைமையில் சென்ற பொதுமக்கள் பத்திரப்பதிவு தலைவர் மற்றும் திருவெறும்பூர் தாலுகா அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியரிடமும் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்ணாநகர் பகுதியில் வீட்டு வசதிகள் வாரியத்தின் மூலம் வாங்கப்பட்ட வீடுகள் மற்றும் மனைகளை விற்பனை செய்வதற்கும் வாங்குவதற்கும் ஏதுவாக உடனடியாக பத்திரப்பதிவு செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story