கழிவு நீரால் மக்கள் அவதி

கழிவு நீரால் மக்கள் அவதி

கழிவு நீர்

காண்டாக்ட்டிங்லிருந்து வெளியேறும் கழிவு நீரால் குடியிருப்பு மக்கள் அவதியடைந்துள்ளனர்.
காம்ப்பேக்டிங் நிறுவனத்திலிருந்து சட்டவிரோதமாக வெளியேற்றப்டும் கழிவு நீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து தொற்று நோயை பரப்பு அவலம்!! திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி தாலூக்கா, சர்கார் பெரியபாளையம் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது குடியிருப்புகளுக்கு மத்தியில் செயல்பட்டுவரும் சுரேகா காம்ப்பேக்டிங் என்ற தனியாருக்கு சொந்தமான நிறுவனம் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்திலிருந்து சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை மழைநீர் வடிகால் வாய்க்காலில் சட்டவிரோதமாக திறந்து விட்டு வருகிறது அதிகளவில் வெளியேற்றப்படும் கழிவு நீர், கால்வாயில் செல்ல வழயின்றி வழிந்தோடி மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் தேங்கி நின்று டெங்கு கொசுவை உற்பத்தி செய்து வருகிறது. இதனால் அப்பகுதியில் மக்கள் இரவு பகல் என எந்நேரத்திலும் கொசுக்கடியில் சிக்கித்தவித்து வருகின்றனர். குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் உற்பத்தியாகும் கொசுவால் டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சர்கார் பெரியபாளையம் ஊராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் மாவட்ட நிர்வாகமும் தலையிட்டு முறைகேடாக கழிவுநீரை வடிகால் வாய்க்காலில் வெளியேற்றும் தனியார் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி குடியிப்பு வாசிகளின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story