வரி வசூல் மைய 'சர்வர்' பழுது மக்கள் காத்திருந்து அவதி
வரி வசூல் மையம்
வரி வசூல் மைய 'சர்வர்' பழுதானதால் பொது மக்கள் அவதி
கெங்கவல்லி:ஆத்துார் நகராட்சியில் பல வார்டுகள் உள்ளன. அங்கு குடிநீர், சொத்து, தொழில், கடை வாடகை, காலிமனை வரி உள்ளிட்டவற்றில், கோடி ரூபாய் வசூலாகிறது. இந்த வரிகளை கட்டுவதற்கு, நகராட்சி அலுவலகத்தில் கணினி வரி வசூல் மையம் உள்ளது. அங்கு தினமும், 100முதல் 200 பேர் பல்வேறு வரிகளை செலுத்தி வருகின்றனர். கடந்த,15முதல், இணைய சேவை, 'சர்வர்', அடிக்கடி பழுது ஏற்படுகிறது. இதனால் வரிகளைகட்ட வரும் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலம் உள்ளது. இதுகுறித்து நகராட்சி அலுவலர்கள் கூறுகையில், இதனால் சில மணி நேரம் மட்டும், 'சர்வர்' வேலை செய்கிறது. ஓரிரு நாளில், 'சர்வர்' சரியான முறையில் செயல்படும் என உறுதி அளித்துள்ளனர்' என்றனர்.
Next Story