திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் கழிப்பிட வசதியின்றி மக்கள் அவதி
மூடிக்கிடக்கும் கழிப்பறை
திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலக பகுதியில் முறையான கழிப்பிட வசதியின்றி மக்கள் அவதிக்குள்ளகினர்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்களின் குறைகளை போக்க மனு கொடுக்க வருவது வழக்கம் இங்கு பொது மக்களுக்கு தேவையான குடிநீர் கழிப்பிட வசதி முறையாக வழங்கப்படவில்லை.
சுமார் பல வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட கழிவறை பயன்படுத்தப்பட முடியாத அளவிற்கு செயல்படாமல் உள்ளது அதனை முறையாக பராமரித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்
Next Story