வாரக்கணக்கில் மழை வெள்ளத்தில் தவிக்கும் மக்கள்
தேங்கி நிற்கும் மழை நீர்
தூத்துக்குடி சின்னமணி நகர் பகுதிகளில் மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் கடந்த மாதம் 17 மற்றும் 18ம் தேதி பெய்த அதி கனமழையால் மாநகராட்சி பகுதிகிளில் மழை வெள்ளம் சூழ்ந்தது. பல்வேறு பகுதிகளில் மழை நீர் அகற்றப்பட்டு இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனினும் மாநகரின் பல பகுதிகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இது போல் மில்லர்புரம் அருகே உள்ள சின்னமணி நகர் 1வது தெரு இரண்டாவது தெரு மூன்றாவது தெரு பகுதிகளில் மழை நீர் வந்து கொண்டே இருக்கிறது. தண்ணீர் குறையவில்லை. இதனால் சுமார் 15 நாட்களாக அந்தப் பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story