உசிலம்பட்டி மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் அவதியுற்ற மக்கள்

உசிலம்பட்டி மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் அவதியுற்ற மக்கள்

உசிலம்பட்டி எம் ல்ஏ அய்யப்பன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து எரியூட்டுக் கொட்டகை அமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.


உசிலம்பட்டி எம் ல்ஏ அய்யப்பன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து எரியூட்டுக் கொட்டகை அமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்.
உசிலம்பட்டி அருகே 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாமல் மக்கள் அவதியுற்ற வந்தனர். தொகுதி மேம்பாட்டு நிதியில் எரியூட்டுக் கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கி பூமி பூஜை செய்த எம்எல்ஏ-வை கிராம மக்கள் பாராட்டி வருகின்றன. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே நல்லுத்தேவன்பட்டி கிராமத்தில் 300க்கும் அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்., இந்த கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாததால் சாலையோரத்திலேயே திறந்த வெளியில் இறந்தவர்களின் உடல்களை எரியூட்டும் அவல நிலை நீடித்து வந்துள்ளது.,இது குறித்து ஊராட்சி நிர்வாகம் முதல் மாவட்ட ஆட்சியர் வரை பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது., மயானத்தில் எரியூட்டுக் கொட்டகை இல்லாததால் கிராம மக்கள் அவதியுற்று வருவதை அறிந்த உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன்., சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் 4 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்து எரியூட்டுக் கொட்டகை அமைக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளார்., அதன்படி இன்று எரியூட்டுக் கொட்டகை அமைக்க எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுகவினர் பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்., கிராம மக்களின் நீண்ட ஆண்டு கோரிக்கையை ஏற்று விரைவில் எரியூட்டுக் கொட்டகை அமைக்க நிதி ஒதுக்கி பணிகளை துவக்கி வைத்த எம்எல்ஏ அய்யப்பனை கிராம மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.,

Tags

Next Story