தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்
முதல்வருடன் புகைப்படம் எடுத்த பொதுமக்கள் 
கொடைக்கானல் கால்ப் கிளப்பிற்கு வருகை புரிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் உடன் செல்பி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு நேற்றைய தினம் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்விற்காக 5 நாள் பயணமாக குடும்பத்துடன் பாம்பார்புரம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு வந்தடைந்தார்,இதனையடுத்து யாரையும் சந்திக்காத தமிழ்நாடு முதல்வர், இன்று மாலை பசுமை பள்ளத்தாக்கு அருகே கால்ப் மைதானத்திற்கு வருகை புரிந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு முதல்வரை சந்திக்க உள்ளூர் மக்கள்,சுற்றுலாப்பயணிகள், கட்சி தொண்டர்கள் காத்திருந்தனர், இதனையடுத்து அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் புகைப்படம் எடுத்து கொண்டார்.

இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதல்வரிடம் செல்பி மற்றும் புகைப்படம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் எடுத்து கொண்டனர்.

Tags

Next Story