அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு ஜவ்வாது மலைவாழ் மக்கள் உற்சாக வரவேற்பு
அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு மக்கள் உற்சாக வரவேற்பு
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கலசப்பாக்கம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜவ்வாது மலை ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றியம் வீரப்பனூர் ஊராட்சி விளாங்குப்பம் கிராமத்தில் மாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக முன்னாள் அமைச்சரும் , அதிமுக மாவட்ட செயலாளரும் , போளூர் சட்டமன்ற உறுப்பினருமான அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர், வனக்குழு தலைவர் சரவணன்,ஊரான் சேகர்,கிளை செயலாளர் கமலன் செய்திருந்தனர். அக்ரி எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்திக்கு கோயில் வாத்தியங்கள் முழங்க பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்ச்சியில் ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் கிளையூர் எம்சி அசோக் ஜமுனாமரத்தூர் வடக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் எம்.மூர்த்தி,ஒன்றிய கவுன்சிலர் மஞ்சுத் ராமகிருஷ்ணன்,ஐ டி விங் மண்டல துணை செயலாளர் தரணிதரன்,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் வீரப்பனூர் சிதம்பரம் தங்கம், பெரிய மலை பெரிய பையன், மேல் சிலம்படி அற்புதம், பலாமரத்தூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன்,மாவட்டபிரதிநிதிகள் தானியார் கருணாநிதி, கிளையூர் ரவீந்திரன் ராவ், முன்னாள் ஒன்றிய அவைத் தலைவர் எக்ஸ் Bஞிளி வரதராஜலு, எம்ஜிஆர் மன்ற நிர்வாகி அண்ணாநகர் பொன்னுசாமி, இளைஞர் பாசறை நிர்வாகி அ.விஜய் சங்கரன், கோவிலூர் ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் ஜி.மணி, கிளை செயலாளர்கள் வெங்கடேசன், நெப்போலியன், ஏழுமலை,திருமால், சிவலிங்கம்,வனிதா ஞானம், சக்திவேல்,நம்மியம்பட்டு வார்டு மெம்பர்கள் குமார்,ஓடமங்கலம் தேவேந்திரன், தீத் தானூர் சின்னசாமி, சேகர்,பிரபு,ஆலஞ்சனுர் லக்ஷ்மணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.