வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்த நபர்கள்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்த  நபர்கள்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே மூன்று வீடுகளில் உள்ள கார், ஆட்டோ, கண்ணாடிகள் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்த நபர்கள் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே மூன்று வீடுகளில் உள்ள கார், ஆட்டோ, கண்ணாடிகள் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை அடித்து துவம்சம் செய்த நபர்கள்! சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு! திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த கோபால் இவருக்கு கோவிந்தசாமி, தேவராஜ், சந்திரன், சங்கர், என நான்கு பிள்ளைகள் உள்ளன.

இந்த நிலையில் கோபால் தங்களுடைய பிள்ளைகளுக்கு சரிப்பாதியாக சொத்து பிரித்துக் கொடுத்ததாக தெரிகிறது இருந்தபோதிலும் அண்ணன் தம்பிகளான சந்திரன் மற்றும் சங்கர் ஆகிய இருவருக்கும் 97 சென்ட அளவிலான நில பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது.

இந்த 97 சென்டில் சொத்தின் காரணமாக சந்திரன் மற்றும் சங்கர் ஆகிய இருவருக்கும் இடையே அவ்வப்போது தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் அதே போல் இன்று தகராறு ஏற்பட கைகலப்பாக மாறியதில் ஆத்திரமடைந்த சந்திரன் அடியாட்களுடன் வந்து சங்கர் வீடு மற்றும் ஆட்டோ கண்ணாடிகளை அடித்து துவம்சம் செய்து உள்ளனர்.

இதனை தடுக்க சென்ற தேவராஜ் மகன்களான ஜெய்சங்கர் மற்றும் ஜெயசீலன் ஆகியோர் சித்தப்பாக்களுக்கு இடையே நடைபெற்ற பிரச்சினையை தடுக்கச் சென்றுள்ளனர். இதன் காரணமாக ஆத்திரமடைந்த சந்திரன் தனது அண்ணன் மகன்கள் சங்கருக்கு சப்போர்ட் செய்வதாக கூறி ஜெயசங்கர் வீட்டின் கண்ணாடிகளை அடித்து துவம்சம் செய்துள்ளனர்.

அதேபோல் ஜெயசீலன் வீட்டிற்கு நுழைந்து வீட்டில் இருந்த கார் கண்ணாடிகள் ஆகியவற்றையும் அடித்து துவம்சம் செய்துள்ளனர். இந்த சம்பவம் அனைத்தும் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. மேலும் இந்த சம்பவம் குறித்து கந்திலி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்து பிரச்சனை காரணமாக அண்ணன் தம்பிகளே அடித்துக் கொண்டதும் மேலும் அண்ணன் பசங்களின் வீட்டின் கண்ணாடிகளை அடித்து துவம்சம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story