மெழுகுவர்த்தி ஏந்தி வந்து மனு அளித்த பொதுமக்கள்!

மெழுகுவர்த்தி ஏந்தி வந்து மனு அளித்த பொதுமக்கள்!

நெடும்புலி கிராம மக்கள் சுடுகாடு அமைக்கக்கோரி நெமிலி ஜமாபந்தியில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

நெடும்புலி கிராம மக்கள் சுடுகாடு அமைக்கக்கோரி நெமிலி ஜமாபந்தியில் மெழுகுவர்த்தி ஏந்தியவாறு வந்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம்,நெமிலி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்புலி கிராமத்தை சார்ந்த பொதுமக்கள் ஊராட்சி மன்றத்தலைவர் மாறன் தலைமையில் நெமிலியில் நடைபெற்ற ஜமாபந்தியில் மெழுகுவரகர்த்தி ஏந்தியபடி வந்து மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷிடம் சுடுகாடு அமைக்கக்கோரி மனு அளித்தனர். அதில் தங்கள் கிராமத்தில் தத்தராயன்பேட்டை மற்றும் ஆதிதிராவிடர் பகுதிக்கு சுடுகாடு வசதி ஏற்படுத்தித் தரவேண்டும். பனப்பாக்கம் சிப்காட்டிற்கு எங்கள் கிராமத்திலிருந்து 250 ஏக்கர் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தியதால் 100 நாள் வேலை செய்ய இடம் இல்லாத நிலை உள்ளது.

ஆகவே மாற்று இடம் வழங்கவேண்டும். ஆதிதிராவிடர் மக்களுக்கு திருமால்பூர் சாலையில் அரசு ஒதுக்கீடு செய்த இலவச வீட்டுமனை குறித்த பயனாளிகளின் விவரங்களை வழங்கவேண்டும். பழுதடைந்த துணை சுகாதார நிலைய கட்டிடத்தை சீரமைத்து தரவேண்டும். நெடும்புலி ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்பேட்டை பகுதியின் வழியே செல்லும் ரெட்டிவலம் கால்வாயில் புதிய பாலம் அமைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இருந்தனர்.மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் சம்பந்தபட்ட துறை அலுவலர்களிடம் கோரிக்கைகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Tags

Next Story