பழங்குடியின பெண்ணின் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்த மக்கள்

பழங்குடியின பெண்ணின் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்த மக்கள்

கோப்பு படம் 

திருச்சி மாவட்டம் துறையூர் அம்மாபட்டி ஏரிக்கரையில் பழங்குடியின பெண்ணின் சடலத்தை புதைக்க விடாமல் தடுத்த மக்கள்.நீண்ட போராட்டத்திற்க்கு பிறகு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திருச்சி மாவட்டம் துறையூர் மதுராபுரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நரிக்குறவர் காலணியில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பழங்குடி (நரிக்குறவர்) இன மக்கள் வசித்து வருகின்றனர்.நகர விரிவாக்கம் காரணமாக, இவர்கள் இறந்தவர்களை வழக்கமாக புதைக்கின்ற இடத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இப்பகுதியை சேர்ந்த மைனர் மனைவி சின்னப்பொண்ணு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். உறவினர்கள் சடலத்தை அம்மாபட்டி ஏரிக்கரையில் புதைத்து கொண்டிருக்கும் போது, அப்பகுதியை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்ப்பட்டது.

துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அதன் பின்பு சின்னபொண்ணு சடலம் நல்லடக்கம் செய்யப்பட்டது

Tags

Next Story