பூட்டிய வீடுகளில் திருடியவர்கள் கைது

பூட்டிய வீடுகளில் திருடியவர்கள் கைது

கைதான குற்றவாளிகள்


கடந்த 6 மாதத்திற்கு முன்பு மயிலாடுதுறை அருகே ஆக்கூரில் பூட்டியிருந்த சங்கர் என்பவர் வீட்டின் கதவை உடைத்து 44 கிராம் தங்கச் செயினை திருட்டு நடந்துள்ளது.. காவல் நிலையங்களில் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் கிடந்தன. மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீனா, தனிப்படை அமைத்து, குற்றவாளிகளை கைது செய்ய உத்தரவிட்டார்.

எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் கிடந்தது. . இந்த நேரத்தில், ஆக்கூரில் திருட்டு நடந்த வீட்டில், நகையுடன் செல்போனும் திருடப்பட்டிருந்தது. அந்த செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்தநிலையில் இருந்துவந்தது. மொபைல் டிராக்கர்மூலம், ஐஎம்ஈஐ எண்ணைக் கொண்டு போலீசார் கண்காணித்துவந்தனர்.

கடந்த 4 தினங்களுக்கு முன்பு, திடீரென்று அந்த செல்போனில் இருந்து வந்த சிக்னலை ஆய்வு செய்தனர். நாகை மாவட்டம் கொத்தவால்பாடி பகுதியில் சிக்னல் காட்டியது ,தனிப்படை போலீசார், அங்கே சென்று செல்போன் வைத்திருந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவன் பழைய குற்றவாளி, சேகர்(57) என தெரிந்தது. அவரை அழைத்துச் சென்று விசாரித்ததில்ல், சேகர் கடந்த 35 ஆண்டுகளாக திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவருவது தெரியவந்தது.

அவர்மீது நாகை, காரைக்கால், மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர், தஞ்சாவூர் போன்ற பல மாவட்டங்களில் 100க்கும்மேற்பட்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு, கைதுசெய்யப்பட்டு சிறை சென்றவராவார். இரண்டு முறை அவர்மீது குண்டாஸ் வழக்குப் போடப்பட்டு விடுதலைபெற்று வந்துள்ளார், ஆக்கூரில் நடந்த திருட்டில், ராமராதபுரத்தில் வசித்துவரும் சேகரின் உறவினர் பாண்டியன்(60) வலதுகையாக இருந்தது தெரியவந்தது,

பாண்டியன் ஆக்கூரில் தனியாக வாடகைக்கு, வீடு எடுத்து, அங்கே தங்கிக் கொண்டு, பகல் நேரத்தில் ஊர் ஊராகச் சென்று பூட்டியிருக்கும் வசதியான வீடுகளை நோட்டமிட்டு, தகவல் சொல்வது, அதன்பிறகு, இருவரும் சேர்ந்து அந்த வீட்டில் திருடுவதும் வாடிக்கை, என தெரியவந்தது. போலீசார் உடனடியாக ராமநாதபுரம் சென்று பாண்டியனைக் கைதுசெய்தனர். நடந்தவற்றை இருவரும் ஒப்புக் கொண்டனர், அவர்களிடமிருந்து, 44 கிராம் தங்க நகைகளை கைப்பற்றினர்.

இருவரையும் செம்பனார்கோவில் போலீசார், கைதுசெய்து, சிறையில் அடைத்தனர்,. மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் உள்ள சிசிடிவி கேமராக்களுக்குச் சிக்காமல் லாவகமாக தப்பிச் சென்ற சேகர், அவர் திருடிய செல்போனே, அவரைக் காட்டிக் கொடுத்தது, குறித்து விரக்தியடைந்தார். 35 ஆண்டுகளாக திருட்டு சம்பவத்தில், ஈடுபட்டுவரும், திருடர்களை செல்போன் ஐஎம்ஈஐ எண்ணை வைத்து நாகை மற்றும் ராமநாதபுரம்வரை சென்று, கைதுசெய்த தனிப்படை போலீசாரை மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மீனா பாராட்டினார்.

Tags

Next Story