யூ.டி.ஸ்மார்ட் கார்டு தருவதாக மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிப்பு

ஸ்மார்ட் கார்டு பெற விண்ணப்பம்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு யூ.டி. அடையாள அட்டை கொடுப்பதற்காக, ஆவணங்கள் கொண்டுவர தகவல் அனுப்பப்பட்டதால், பெரும்பாலான மாற்றுத்திறனாளிகள் நேற்று தாலுக்கா அலுவலகத்தில் ஆவணங்களை சமர்பித்தனர்.
இது குறித்து ஒ.ஏ.பி. தாசில்தார் தங்கம் கூறியதாவது: யூ.டி. அடையாள அட்டை என்பது மத்திய அரசால் வழங்கப்படுவது. இது நாமக்கல் மாவட்ட அளவில் 19 ஆயிரம் எனும் அளவிலும், குமாரபாளையம் தொகுதி அளவில் ஆயிரத்து 366 பேர் இதனைப் பெற தகுதியானவர்கள் என கணக்கீடு உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட நபர்களுக்கு போன் மூலம் தகவல் தரப்பட்டது. அதன்படி அவர்கள் ஆவணங்கள் கொடுத்து வருகிறார்கள். இதனை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.
நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு, மாவட்ட தலைவர் பழனிவேல் கூறியதாவது: குமாரபாளையம் வருவாய் துறையின் மூலம் மாற்றுத்திறனுடையோர்களிடம் தேசிய அடையாள அட்டை நகல். ஆதார் கார்டு. போட்டோ பெறப்பட்டது. இது மாற்றுத்திறனுடையோர்க்கு யூ.டி. அடையாள அட்டை பெறுவதற்காக பெறப்படுகிறது. இந்த கார்டு இந்தியா முழுவதும் பயன்படுத்திக்கொள்ள வழங்கப்படுகிறது.இந்த அடையாள அட்டை 5 ஆண்டுகளாக வழங்கப்படுகிறது. நாமக்கல் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகம் முழுமையாக வழங்கவில்லை.மாற்றுத்திறனாளிகள் இந்த அட்டை பெற கொடுக்கப்படும் கலர் சான்றிதழ்கள் நகலுக்கு ஆகும் செலவு 60.ரூபாய் ஆகும். இதுவரை 12 முறை ரூ.720 செலவு செய்தும் அடையாள அட்டை வரவில்லை. ஒரு சிலருக்கு வந்திருந்தாலும் கார்டில் சரியான முகவரி, சரியான பிறந்த தேதி இல்லை,சரியான ஊனத்தின் தன்மை மற்றும் விழுக்காடு பதியப்படவில்லை. இந்த அடையாள அட்டை வாங்காத நபர்களிடம் ஆவணங்கள் கேட்டால் பரவாயில்லை. அடையாள அட்டை வாங்கியவர்கள், வாங்காதவர்கள் என அனைவரையும் வர சொல்லி, ஆவணங்கள் கொடுக்க சொல்லியுள்ளனர். அனைத்து மாற்றுத்திறனாளிகளையும் சிரமப்பட செய்துவிட்டார்கள். அதுவும் மாவட்ட மாற்றுத்திறனுடையோர் அலுவலகத்தில் தேசிய அடையாள அட்டை பெற கலர் நகல் கேட்கிறார்கள். ஆனால் வருவாய் துறையினர் இங்கு கருப்பு வெள்ளை நகல் பெறுகின்றனர். எனவே இந்த முறையும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அடையாள அட்டை கிடைக்காது. அடையாள அட்டை பெறும் சிரமங்களை பலமுறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம், சங்கத்தின் மூலம் மனுவாகவும், நேரடியாக சந்தித்து சொல்லியும் பயனில்லை. இவ்வாறு அவர் கூறினார். -
