மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்புதமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் நாகராஜ் தலைமையில், TARATDAC சங்கத்தை கண்காணிப்பு குழுவில் இணைத்திட வேண்டும், மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்காமல் அன்றே மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கிட வேண்டும், மாற்றுத்திறனாளி நலத்துறை அதிகாரியை நிரந்தரமாக நியமித்திட வேண்டும், மாவட்ட ஆட்சியர் அலுவலக பேருந்து நிலையத்தில் சாய்வுதளம் மற்றும் தடையற்ற சூழலை உருவாக்கவும். புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்படுகின்ற அலுவலகத்தில் தடையற்ற சூழலை உருவாக்க வேண்டும், இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கியவர்களுக்கு இடத்தை அளந்து கொடுத்து அந்த இடத்தில் வீட்டினைக் கட்டிக்கொடுத்திடவேண்டும் புதிதாக விண்ணப்பித்து காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டியும்,மாற்றுத்திறனாளிகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் AAY குடும்ப அட்டை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும், மாதந்தோறும் ரூ. 1500 மற்றும் ரூ. 2000 உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் அனைவருக்கும் உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 100 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story