வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா
தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் பணி வழங்கக்கோரி கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவகத்தில் மாற்றுத்திறனாளிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகளுக்கு, பணி வழங்க மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 100 நாள் வேலை வழங்கக்கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான நலச்சங்கத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள், கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து அங்குள்ள அலுவலக நுழைவுவாயில் முன்பு அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன் கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் முத்துவேல், மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு 100 நாள் வேலை கேட்டு கோஷம் எழுப்பினர்.இதையடுத்து அவர்களிடம் வட்டார வளர்ச்சி அதி காரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட் டத்தின் கீழ் பணி வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags

Next Story