விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
X

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு முதல்-அமைச்சரின் வாக்குறுதியை விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அலட்சியப்படுத்தாமல் தென்னமா தேவி கிராம மாற்றுத்திறனாளிகளுக்கு காலம் கடத்தாமல் இலவச வீட்டுமனை பட்டாவை வழங்கக்கோரி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோலியனூர் ஒன்றிய தலைவர் மும்மூர்த்தி தலைமை தாங்கினார்.

மாநில துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் முருகன், பொருளாளர் ஜெயக்குமார், துணை செயலாளர் முத்துவேல் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள் மணிகண்டன், மோகன், நிர்வாகிகள் வீர பாண்டி, வெங்கடேசன், குறளரசன், சுதாகர், ஞானவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Next Story