சிவகங்கையில் மார்ச் 9ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

சிவகங்கையில் மார்ச் 9ஆம் தேதி மக்கள் நீதிமன்றம்

நீதிமன்றம்

சிவகங்கை நீதிமன்றங்களில் மார்ச் 9ஆம் தேதி மக்கள் நீதிமன்றம் நடைபெறும் என்று தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் மார்ச் 9ம் தேதி காலை 10:00 மணிக்கு நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட நீதிமன்றங்களில் நிலுவையிலுள்ள வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக தேசிய சட்டப் பணி ஆணைக்குழு உத்தரவுப்படி,

தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. 11 அமர்வுகளில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உதவியுடன் வழக்குகளில் சமரச முடிவுக்கான முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், காசோலை மோசடி வழக்குகள்,

உரிமையியல் வழக்குகள், குடும்ப பிரச்னை குறித்த வழக்குகள், தொழிலாளர் பிரச்னை குறித்த வழக்குகள், சமரச குற்ற வழக்குகள் குறித்து தீர்வு கண்டு பயனடையலாம். தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் யாதொரு மேல் முறையீடும் செய்ய இயலாது. அதே போல், தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கான நீதிமன்ற கட்டணத்தை வழக்கின் தரப்பினர்கள் முழுவதும் திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் வழக்கின் தரப்பினர்கள் நீதிமன்றங்களுக்கு வருவதால் ஏற்படும் கால விரயத்தையும், பணச்செலவையும் தவிர்க்கலாம். இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, பொதுமக்கள் நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ள தங்கள் வழக்குகளை விரைவாகவும், சுமூகமாகவும் தீர்வு கண்டு பயன்பெறலாம்.

Tags

Next Story