அக்கச்சிப்பட்டி மயான சாலை பணியை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை!

அக்கச்சிப்பட்டி மயான சாலை பணியை துரிதப்படுத்த மக்கள் கோரிக்கை!

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராம மயான சாலையை விரைந்து முடித்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கந்தர்வகோட்டை அருகே அக்கச்சிப்பட்டி கிராம மயான சாலையை விரைந்து முடித்துத் தருமாறு கிராம மக்கள் கோரிக்கை வைக்கின்றனர். அக்கச்சிப்பட்டி கிராமத்துக்கான மயான சாலை மண் சாலையாக இருந்ததால் தார் சாலை கேட்டு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், முதல்வர் கிராம சாலை இணைப்பு திட்டத்தில் சாலை அமைக்க நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கின.இதைத்தொடர்ந்து, சாலைப் பணிகள் கிடப்பில் போடப்பட்டதைத் தொடர்ந்து, ஊராட்சி மன்ற தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் இதுகுறித்து புகார் அளித்தார். அதன்பேரில், மீண்டும் தொடங்கிய இந்தச் சாலையின் மேல் ஜல்லிக்கற்கள் பரப்பி சுமார் 2 மாதங்கள் ஆகின்றனவாம். இந்தப் பகுதியில் உள்ள மயானம் மற்றும் ஊராட்சி குப்பை சேகரிக்கும் இடம், கிராம வயல்பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கான பாதையில் பல மாதங்களாக ஜல்லியை மட்டும் பரப்பி வைத்துள்ளதால் மயானத்துக்குச் செல்வோர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் மிகுந்த சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து பலமுறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் அவர்கள் அலட்சியம் காட்டுவதாகவும் புகார் கூறுகின்றனர். மேலும் ஒப்பந்ததாரர் இப்பணியில் அதீத அலட்சியம் காட்டுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே இந்தச் சாலை பணியில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தரமான சாலையைப் போட்டுத் தரவேண்டும் என அக்கட்சிப்பட்டி கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

Tags

Next Story