மக்களின் கோாிக்கைகள் நிறைவேற்றப்படும் : அமைச்சர் உறுதி!
அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் பெய்த எதிர்பாராத கன மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன அப்பணியில் முழுமையாக அமைச்சர் , அரசு துறை அதிகாாிகள் ஈடுபட்டு, புதிய கால்வாய் சேதமடைந்த சாலைகள் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் பல்வேறு பகுதியில் புதிய பேவர் பிளாக் சாலைகள் தார்சாலைகள் கழிவுநீர் கால்வாய்கள் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று பல்வேறு பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கோாிக்கை வைத்திருந்தனர்.
தேர்தல் நடைமுறைக்கு பின்னர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இந்நிலையில் 54,53வது வார்டுக்குட்பட்ட பகுதி மக்கள் அமைச்சரை சந்தித்து மனு அளித்திருந்தனர்.
இதனையடுத்து வேலாயுதநகா் உள்ளிட்ட பகுதி பொதுமக்களை சந்தித்து தங்களது குறைகள் குறித்து கேட்டறிந்தார். மக்களுடன் கலந்துரையாடலில் பேசும் போது திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் இந்த பகுதிக்கு புதிய திட்டங்கள் குறிப்பாக சாலை வசதி, கழிவு நீர் கால்வாய் வசதி, செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சியில் எந்த பணியுமே நடைபெறாமல் இருந்ததை நீங்கள் அறிவீர்கள் மக்களுக்காக தொடா்ந்து பணியாற்றும் கட்சி திமுக தான். திமுக ஆட்சிதான் உங்களுக்கு பொற்காலம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினும் மக்கள் நலன் தான் முக்கியம் என்று கருதி பணியாற்றுகிறார்.
அவரது வழியில் உங்களது சில கோாிக்கைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக முழுமையாக செய்து கொடுப்பேன், என்று உறுதி அளித்தார்.
மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் வக்கீல் பாலகுருசாமி, பகுதி செயலாளர் மேகநாதன், கவுன்சிலர் விஜயகுமார், மாநகர மகளிர் அணி அமைப்பாளர் ஜெயக்கனி, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி பிரதிநிதி மனோகரன்,வட்டப்பிரதிநிதி பாஸ்கர், மற்றும் மணி, அல்பட், தீபக் ராஜேஷ், அசோக், உள்பட பலர் உடனிருந்தனர்.