மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

 தஞ்சாவூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சாவூரில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (19.02.2024) திங்கள்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 422 மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் வழங்கினார்கள். இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டார்.

மேலும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில் போதைப் பொருட்களை பயன்படுத்துவதற்கு எதிராக மாவட்ட அளவில் விழிப்புணர்வு பேச்சு போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி போன்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்களை வழங்கினார். தொடர்ந்து, முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து பேராவூரணி வட்டத்தைச் சார்ந்த ஷேக் தாவூர் என்பவரின் மகன் பாம்பு கடித்து இறந்ததற்கு அவரது குடும்பத்தினருக்கு ரூ.1 இலட்சத்திற்கான காசோலையும், மாவட்ட ஆட்சியரின் பொதுநிவாரண நிதியிலிருந்து மாணிக்கம் என்பவருக்கு நுரையீரல் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரது தொடர் சிகிச்சை பயன்பாட்டிற்காக ஆக்ஸிஜன் செறிவூட்டியினையும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை சேர்ந்த கவிதா என்பவருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) எஸ்.சங்கர், உதவி ஆணையர் (கலால்) எம்.ரவிச்சந்திரன் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story