மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஈரோடு மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.


ஈரோடு மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ராஜ கோபால் சுன்கரா தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கணவனால் கைவிடப்பட்டோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாலை வசதி, அடிப்படை வசதிகள் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 215 மனுக்கள் வரப்பெற்றன.

பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தாட்கோ மூலம் ஒரு தற்காலிக துப்புரவு பணியாளரின் வாரகதாரருக்கு இறப்பு மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவியாக ரூ.25,000/-க்கான காசோலையினையும், 2 பணியாளர்களுக்கு மகப்பேறு நிதியுதவியாக தலா காசோலைகளையும் வழங்கினார். துப்புரவு ரூ.6,000/-க்கான தொடர்ந்து, பெருந்துறை அரசு மாதிரி பள்ளியைச் சேர்ந்த மாணவன் தமிழ் வழியில் பயின்று நீட் தேர்வு 2024-ல் 39 மாவட்ட அரசு மாதிரிப்பள்ளிகளில் மாநில அளவில் முதலிடம் பெற்றதைப் பாராட்டி நற்சான்றிதழை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story