மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் வழங்கிய கோரிக்கை மனுக்கள், கடந்த வாரங்களில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் போன்ற நிகழ்வுகளில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

தங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையில் அரசு அலுவலர்களைத் தேடி மனுக்களை கொடுக்கும் பொதுமக்களின் நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் அரசு அலுவலர்கள் பணியாற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பின்னர் பொதுமக்களிடையே பேசிய மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்து தங்கள் கோரிக்கைகளை மனுக்களாக வழங்கும் பொதுமக்களின் வசதிக்காக கோரிக்கை மனுக்களை இலவசமாக எழுதிக் கொடுப்பதற்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் வலதுபுறம் உள்ள கூட்ட அரங்கில் இலவசமாக மனுக்கள் எழுதிக் கொடுக்கப்படுகிறது. எனவே இந்த வசதியினை மனு கொடுக்க வரும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார். இக்கூட்டத்தில் பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடன் உதவி, வீட்டுமனைப்பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன் கோருதல், இலவச தையல் இயந்திரம் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 566 மனுக்கள் பெறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story